அஜித் படத்திற்கு தீம் மியூசிக் ரெடி: அனிருத்

Bookmark and Share

அஜித் படத்திற்கு தீம் மியூசிக் ரெடி: அனிருத்

இளைய இசையமைப்பாளர்களில் தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு மளமளவென முன்னேறி வருகிறார் அனிருத். அதுமட்டுமல்ல இசையின் மூலம் இளைஞர்களை எப்படி கவர வேண்டும் என்ற வித்தையையும் கற்று வைத்துள்ளார்.

அதாவது தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் ஒரு தீம் மியூஸிக்கை உருவாக்கி அந்தப் படத்துக்கு அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திவிடுகிறார். கடந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த 'கத்தி' படத்தின் மூலம் முதல்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் அனிருத்.

கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளிவந்தபோதே அதற்கு தீம் மியூசிக் அமைத்தார். அது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தற்போது 'வீரம்' சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் அஜித்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறார் அனிருத்.  

இப்படத்திற்காகவும்  தீம் மியூசிக் ஒன்றை அனிருத் உருவாக்கவிருக்கிறாராம்.  அதை வாட்ஸ்அப்பில் அஜித்துக்கு அனுப்பி இருக்கிறார். அனிருத்தின் தீம் மியூசிக்கைக் கேட்டுவிட்டு பாராட்டினாராம் அஜித்.

விஜய், அஜித்தைத் தொடர்ந்து அடுத்து விக்ரமுடனும் மர்மமனிதன் படத்தில் இணைகிறார் அனிருத்.  'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்திற்கும் ஒரு தீம் மியூசிக்கை உருவாக்க இருக்கிறாராம் அனிருத்.


Post your comment





Related News
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
‘தல 57’ பாடல் பணிகளை தொடங்கிய அனிருத்!
மீண்டும் ‘தல’யுடன் இணைகிறார் அனிருத்!
அனிருத்திற்கு அட்வைஸ் செய்த தல; உண்மையை சொல்லும் இயக்குனர்
ரிலீசுக்கு ஆரவாரமாக தயாராகிவிட்ட வேதாளம்..!
அஜித் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்திய அனிருத்
தல 56 படத்துக்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions