அண்ணாமலை பாடலை அனிருத் பாடினார்!

Bookmark and Share

அண்ணாமலை பாடலை அனிருத் பாடினார்!

ஜெய்- சுரபி நடித்து வரும் படம் புகழ். இந்த படத்தை சித்தார்த் நடித்த உதயம் என்எச்-4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியிருக்கிறார். வேலையில்லா பட்டதாரி டைரக்டர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு விவேக் மெர்வின் என்ற இரட்டையர் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தில் பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை, வாடா மச்சான் வாடா என்றொரு ப்ரண்ட்ஷிப் பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை இதுவரை யாருமே பாண்டிச்சேரியை காட்டாத அளவுக்கு மிக புதுமையான லொகேசனில் படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர் மணிமாறன்.

மேலும்., பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஐ படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மெர்சலாயிட்டேன் என்ற ஹிட் பாடலை பாடிய இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலை பாடியிருக்கிறார்.

ஒரு வெற்றியை சந்திக்கும் நண்பர்கள் அதை எப்படியெல்லாம் ஜாலியாக கொண்டாடி மகிழ்கிறார்கள் என்ற சூழலில் அமைந்த இந்த பாடலை அதிக துள்ளலாக பாடியுள்ளாராம் அனிருத்.

அந்த வகையில், அண்ணாமலையின் வரிகளும், அனிருத்தின் குரலும் இந்த பாடலுக்கு சிறப்பு சேர்த்திருப்பதாக கூறும் இயக்குனர். இப்பாடலும் மெர்சலாயிட்டேன் பாடல் போன்று பெரிய அளவில் ஹிட்டாகும் என்கிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions