கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்

Bookmark and Share

கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்

‘பீப்’ பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அனிருத், நடிகர் சிம்பு ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் கொங்குநாடு அருந்ததி பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் சிவாஜி ஆகியோர் சார்பில், கோவை 2-வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில்,நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று இந்த வழக்கு நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிம்பு சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான ஆணையை ஐகோர்ட்டில் பெற்று இருப்பதாக கூறி, அந்த ஆணையை சமர்ப்பித்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

இசையமைப்பாளர் அனிருத் சம்மனை பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 12-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி
பீப்பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசாரிடம் ஆஜரான சிம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions