நாடு திரும்பினார் அனிருத். கைது எங்கே? எப்போது?

Bookmark and Share

நாடு திரும்பினார் அனிருத். கைது எங்கே? எப்போது?

கனடாவுக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த அனிருத், இசை நிகழ்ச்சி முடிவடைந்து கடந்த வாரம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அவருடன் சென்ற இசைக்குழுவினர் சென்னை திரும்பிவிட்ட நிலையில் அனிருத் எங்கே? என்ற குழப்பம் நீடித்து வந்தது.

Beep பாடல் ஏற்படுத்தியுள்ள சர்ச்சையால் கைது நடவடிக்கைக்கு பயந்து அனிருத் நாடு திரும்பாமல் கனடாவிலேயே தங்கிவிட்டார்.

தமக்கும் சர்ச்சைக்குரிய பாடலுக்கும் சம்பந்தமில்லை என்று கூறும் அனிருத், போலிஸ் நடவடிக்கைக்கு பயந்து கனடாவிலேயே இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியது.

இந்நிலையில் நடந்த வார விடுமுறையில் அனிருத் அவர்கள் கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று தனது பயணத்தை உல்லாசமாக களித்த புகைப்படங்கள், இவர் கூட செல்பி படம் பிடித்தவர்களின் சமுகவலைதளங்களில் உலா வந்தன.

இந்நிலையில் நேற்று அனிருத் கனடாவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டதாகவும், புதன் கிழமை அதிகாலை (இந்திய நேரம்) அவர் இந்தியாவை வந்தடைவார் என்றும் அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடல் சர்ச்சை - சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ரசிகர்கள்!
சிம்பு, அனிருத்துக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு
பீப் சாங் விவகாரம் - நடிகர் சங்கம் விளக்கம்
தனுஷ்மீது புகைச்சலில் சிம்பு : கதிகலங்கும் கோடம்பாக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions