அனிருத்துக்கு சவால் விடும் தனுஷ்...!

Bookmark and Share

அனிருத்துக்கு சவால் விடும் தனுஷ்...!

சிவகார்த்திகேயனையும், தனுஷையும் கூடப் பிரித்து விடுவார்களோ, என்னமோ தெரியாது, ஆனால் தனுஷையும், அனிருத்தையும் பிரிக்கவே முடியாது போலத் தோன்றுகிறது. ஒரு வகையில் தனுஷும், அனிருத்தும் உறவினர்களாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சிவகார்த்திகேயனாவது தனுஷுக்குப் போட்டியாக வளர்ந்துவிடுவார் என்று நினைக்கலாம். ஆனால், அனிருத்துக்கோ தனுஷோ, அல்லது தனுஷிற்கு அனிருத்தோ போட்டியாக உருவாக மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

படத்தில் ஆரம்பமான அவர்களது திரையுலக நெருக்கம் படத்திற்குப் படம் அதிகமாகி வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.நேற்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷிடம் யாருக்காவது சவால் விட வேண்டும் என்றால் நீங்கள் யாருக்கு சவால் விடுவீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, தனுஷ் அனிருத்துக்கு சவால் விடுவேன் என்றார்.

“ஒரு முறை கூட அனிருத் போன் அடித்தால் உடனே எடுத்துப் பேச மாட்டார். அதே போல், குறிப்பிட்ட நேரத்திற்கு வரச் சொன்னால், கண்டிப்பாக வர மாட்டார். எப்போதுமே தாமதமாக வருவார். அதனால், ஒரு முறை போன் அடிக்கும் போது அவர் முதல் ரிங்-கிலேயே அந்த போனை எடுக்க வேண்டும், சொன்ன நேரத்திற்கு 'பன்க்சுவல்' ஆக வரவேண்டும் என்று சவால் விடுவேன்,” என்று பதிலளித்தார். தனுஷின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என அனிருத் அறிவிப்பாரா....?


Post your comment





Related News
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?
இவருக்காகதான் விஐபி 2-வில் அனிருத்தை கழட்டிவிட்டாரா தனுஷ்?
இணையதளத்தில் சுமார் 10 கோடி பேரை பார்க்கவைத்த 'வொய் திஸ் கொலவெறி'
தனுஷ் தம்பிக்கு இசையமைக்கும் அனிருத்!
தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions