முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்

Bookmark and Share

முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்

தமிழ் திரையுலகின் நட்சத்திர இசையமைப்பாளர்கள் என்றால் தற்சமயம் அனைவரும் அனிருத்தையும் ஜி.வி.பிரகாஷையும் தான் சொல்வார்கள். ஏனெனில் அவர்களே தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

சம போட்டியாளர்களாக கருதப்படும் அவர்கள் முதல்முறையாக ஒன்றாக இணைந்து வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் பாட உள்ளனர். படத்தின் இசையமைப்பாளராக இயக்குனரின் தம்பி பிரேம்ஜி உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்கான ‘ச்ச்சா....ச்ச்சா...சாரே’வை நடிகர் சூர்யாவும் கார்த்தியும் பாடியிருந்தனர்.

இந்த நிலையில் 2வது மற்றும் 3வது சிங்கிள் டிராக்கை முறையே அனிருத்தும் ஜி.வி.யும் பாட உள்ளனர். படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில் இந்த புது வருகைகளினால் படம் மேலும் பிரபலமடைந்து வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions