பாடல் வரிகளுக்கு விளக்கம் கேட்ட அனிருத்

Bookmark and Share

பாடல் வரிகளுக்கு விளக்கம் கேட்ட அனிருத்

ஜெயம் ரவி நடித்துள்ள படம் ரோமியோ ஜூலியட். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இமான் இசையில் பாடல்கள் நிறைந்த ஆல்பமாக படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் அனிரூத் பாடியிருக்கும் ஐ பேடு வாழ்க்கை தேவையில்லை என்ற பாடலை மட்டும் சுமார் 5 மணி நேரம் கம்போஸ் செய்து பாடி முடித்திருக்கிறது இமான் டீம்.

காலதாமதத்திற்கு காரணம் பாடலை எழுதியிருக்கும் ராகேஷ் வரிகள் அனிருத் வாய்க்குள் நுழைய மறுத்து அடம்பிடித்திருக்கிறது. அந்தளவுக்கு பக்கா லோக்கல் வார்த்தைகளை எழுதி கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் கேட்டு பாடி முடித்துள்ளார் அனிருத். அனேகன் படத்தில் டங்காமாரி பாடலை எழுதியவர் ராகேஷ். சினிமாவில் புரியாத கதையாக இருந்தாலும் எதையாவது புதுமையாக கொடுத்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள் நம் படைப்பாளிகள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions