மூன்று இசையமைப்பாளர்கள் பாடகர்களான படம்!

Bookmark and Share

மூன்று இசையமைப்பாளர்கள் பாடகர்களான படம்!

இப்போது இளவட்ட நாயகர்களில் ஒருவர் இன்னொருவர் படங்களில் தோன்றி நடித்து உதவி வருகிறார்கள். இது இளைய தலைமுறையின் ஆரோக்கியமான போக்காக இருக்கிறது. இதே போக்கு இசையமைப்பாளர்களிடமும் வந்துள்ளது நல்ல அறிகுறியாகும். அனிருத் பிறரது இசையில் பாடுகிறார்.

தேவாவும் இளைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடிவருகிறார். இப்போது ஒரே படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பாடியுள்ளது பாராட்ட வேண்டிய விஷயம்.

புதுமுக இசையமைப்பளர் நவீன் இதுவரை கல்யாண சமையல் சாதம் என்கிற ஒரு படம்தான் இசையமைத்து இருக்கிறார். அவர் இசையமைக்கும் இரண்டாவது படம் வில் அம்பு  வழக்கு எண் ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார்கள்.

சுசீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நவீன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜி.வி.பிரகாஷ் ,அனிருத், டி.இமான்  மூன்று பேரும் ஆளுக்கொரு பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார்கள். மூன்றும் மூன்று விதத்தில் ரசிகர்களைக் கவரும்படி இருக்குமாம்.


Post your comment





Related News
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions