செப்டம்பர் 24ல் அனிருத்தின் ‘நானும் ரவுடிதான்’ பட பாடல் வெளியீடு

Bookmark and Share

செப்டம்பர் 24ல் அனிருத்தின் ‘நானும் ரவுடிதான்’ பட பாடல் வெளியீடு

இசையமைத்த முதல் படத்திலேயே இந்தியா அளவில் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசையில் வெளியான கொலவெறி பாடல் துருக்கி வரை சென்றுள்ளது. அடுத்தடுத்து இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

தற்போது இவர்  ‘ஆக்கோ’, அஜித் நடித்து வரும் படம், விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’, தனுஷ் நடித்து வரும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதில் ‘நானும் ரவுடிதான்’ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தங்கமே…’ எனத் தொடங்கும் பாடலை செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக அனிருத் அறிவித்துள்ளார். ஏற்கனவே படத்தின் புரோமொஷனுக்காக ‘காதல் என்பது மாயவலை…’ என்ற இப்பட பாடல் வரிகளை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions