ஜி.வி.யின் வழியில் அனிருத்

Bookmark and Share

ஜி.வி.யின் வழியில் அனிருத்

டார்லிங் படத்தில் நாயகனாக நடித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், அதையடுத்து த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, பாஷா என்கிற ஆண்டனி ஆகிய படங்ளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த படங்களில் நடிப்பதற்கு முன்பு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா -என்ற பாடலில் தோன்றி சிறிது நேரம் நடனம் ஆடிவிட்டு செல்வார்.

அதேபோன்று இப்போது இன்னொரு இசையமைப்பாளரான அனிருத்தும் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான மாரி படத்தில் தனுசுடன் இணைந்து சிறிது நேரம் ஆடிவிட்டு செல்வது போன்று நடித்துள்ளார். இந்த காட்சியில் முதலில் அவரை ஒரு கோணியில் ஒரே கையில் தூக்கிகொண்டு வந்து தனுஷ் முன்பு வைப்பார் ரோபோ ஷங்கர்.

அப்போது இதென்ன ரொம்ப வெயிட்லெஸ்ஸா இருக்கும் என்று சொல்லிக்கொண்டே கோணியை திறந்து பார்த்தால் அதற்குள் இருந்து சின்ன பையனாட்டம் அனிருத் வெளியே வருவார். அதையடுத்து ஒரு மியூசிக் டிராக் போடப்பட்டு அதற்கேற்ப தனுசுடன் இணைந்து அனிருத்தும் சிறிது நேரம் ஆடிவிட்டு செல்வார்.

ஏற்கனவே மிர்ச்சி சிவா-ப்ரியாஆனந்த் நடித்த வணக்கம் சென்னை படத்தில் ஒரு பாடல் முழுக்க தோன்றி நடனமாடியிருந்தார் அனிருத். அதையடுத்து இந்த படத்தில் காமெடியாக தோன்றி நடனமாடிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆக, விஜய்யுடன் இணைந்து தலைவாவில் நடனமாடிய பிறகு ஜி.வி.பிரகாஷ் ஹீரோவானதைப்போன்று அடுத்தபடியாக அனிருத்தும் ஹீரோவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions