'சிங்கம் 3' படத்திற்கு இசை அனிருத்...!

Bookmark and Share

'சிங்கம் 3' படத்திற்கு இசை அனிருத்...!

கடகடவென தமிழ் சினிமாவில் மேலே ஏறிக் கொண்டிருக்கிறார் அனிருத். இயக்குனர் ஹரி, சூர்யா மீண்டும் இணையவுள்ள 'சிங்கம் 3' படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, விஜய் நடித்த 'கத்தி' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அடுத்து அஜித் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர் ராஜா, இமான் ஆகியோருக்கு அடுத்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் இசையமைப்பாளராக அனிருத் வளர்ந்து வருகிறார்.

தற்போது படத்தை இயக்கும் பல முன்னணி இயக்குனர்களும் அனிருத்தையே நாடி வருவதாக ஒரு செய்தி ஏற்கெனவே வெளிவந்தது. ஷங்கரின் அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.

“ஆகோ, மாரி, நானும் ரௌடிதான், ரங்கூன்" ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கில் ராம் சரண் தேஜா நடிக்கும் புதிய படத்திற்கும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ள ஹிந்திப் படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

அனிருத்தின் இசையில் விரைவில் வெளிவர உள்ள 'காக்கி சட்டை' படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகி உள்ளது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions