நட்புக்காக பாடிய அனிருத், சிவகார்த்திகேயன்

Bookmark and Share

நட்புக்காக பாடிய அனிருத், சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', படத்தைத் தயாரித்து வெளியிட்ட எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை' படத்தையும் வெளியிட்டது.

இப்போது இந்த நிறுவனம் விமல், அஞ்சலி, சூரி நடிக்கும் 'மாப்ள சிங்கம்' படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்குகிறார். “தென்மேற்குப் பருவக்காற்று, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மதயானைக் கூட்டம், மஞ்சப்பை” உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'எதுக்கு மச்சான் காதலு...' என்ற பாடலை படத்தின் பிரமோஷனுக்காக நட்புக்காக இசையமைப்பாளர் அனிருத்தும், சிவகார்த்திகேயனும் பாடிக் கொடுத்துள்ளனர்.

அதற்காக ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஒரு பிரமோஷன் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் அனிருத், சிவகார்த்திகேயன், விமல், சூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ரகுநந்தன் இசையமைத்து வரும் இந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்பது போகப் போகத்தான் தெரியும். நல்ல திறமையுள்ள அவருக்கு கமர்ஷியல் வெற்றியாக இன்னும் பெரிய படங்கள் அமையாமல் இருக்கிறது. இந்தப் படம் மூலம் அந்தக் குறை நீங்குமா?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions