அனிருத்துக்காக டியூன் ரெடி பண்ணும் ஸ்ரீகாந்த் தேவா!

Bookmark and Share

அனிருத்துக்காக டியூன் ரெடி பண்ணும் ஸ்ரீகாந்த் தேவா!

ஏ.ஆர்.ரகுமான் வரை தற்போது அனிருத்துக்கு பின்னணி பாடும் வாய்ப்பளித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்த பேவரிட்டாகி விட்டார் அனிருத். அதோடு, அவர் பாடும் பாடல்கள் ஹிட்டடித்து வருவதால், ரோமியோ ஜூலியட் படத்தில் டண்டனக்கா பாடலை டி.இமானும் அவரை வைத்து பாட வைத்தார்.

அதைத்தொடர்ந்து, தற்போது ஸ்ரீகாந்த் தேவாவும் பாலக்காடு மாதவன் படத்தில் அனிருத்தை ஒரு பாடல் பாட வைத்தார். உச்சி மேல உச்சி மேல -என்று தொடங்கும் அந்த பாடல் மற்ற பாடல்களை விட அதிகப்படியான இணையதள ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறதாம்.

இந்த தகவலை ஒருநாள் அனிருத்துக்கும் தெரியப்படுத்தி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாராம் ஸ்ரீகாந்த் தேவா. அதோடு, அடுத்தடுத்து தான் இசையமைக்கும் இன்னும் இரண்டு படங்களில் அவரை அழைத்து பாட வைக்கவும் முடிவு செய்திருக்கும் ஸ்ரீகாந்த்தேவா, அனிருத் நல்ல இசையமைப்பாளர் மட்டுமின்றி நல்ல பாடகரும்கூட.

அவரது குரல் இளவட்ட ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதனால் எனது இசையில் அவரை பாட வைப்பதில் எனக்கு அதிக ஆர்வமாக உள்ளது என்கிறார்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions