அடுத்தடுத்து ஹிட்டால் உற்சாகத்தில் அனிருத்!

Bookmark and Share

அடுத்தடுத்து ஹிட்டால் உற்சாகத்தில் அனிருத்!

ஒரு பாடல் சூப்பர் ஹிட்டானால் அதே நேரத்தில் வெளியாகும் மற்ற படத்தின் பாடல்கள் பிரபலமாகாமல் போய்விடுவது வழக்கம்.

ஆனால் தற்போது அனிருத் தற்போது இசையமைத்து வெளியான .நானும் ரௌடிதான் மற்றும் வேதாளம் இரண்டு படங்களின் பாடல்களும்  பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. 

விஜய்சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் நானும் ரௌடிதான் படத்தின் பாடல்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு வெளியாகி யூத்களுக்கு மிகவும் பிடித்த ஆல்பமாக இருப்பதால் நானும் ரௌடிதான் பாடல்களை கொண்டாடி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அஜித்துடன் முதல்முறையாக அனிருத் இணைந்திருக்கும் வேதாளம் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் ரிலீஸாகி தல ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் ஆல்பமாக வேதாளம் படத்தின் பாடல்கள் உள்ளன. 

இதனால் அடுத்தடுத்து வெளியான தனது இரண்டு ஆல்பங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார் அனிருத்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions