அனிருத்தை கண்டு விழந்த விவேக்

Bookmark and Share

அனிருத்தை கண்டு விழந்த விவேக்

விவேக் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விவேக் பேசும்போது, இந்த படத்தை முதலில் பட்ஜெட் படமாக எடுக்கத்தான் நினைத்தோம். ஆனால், செலவு அதிகமாகப் போய்விட்டது.

வெளிநாடுகளில் சென்று பல விலையுயர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து சில காட்சிகளை படமாக்கினோம். இந்த படத்தில் நான் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த பாடலின் டிராக்கை போட்டு காண்பித்தோம். அதை கேட்டதும், உடனே பாடிக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.

அவரிடம் பேசிவிட்டு நான் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்துகொண்டிருந்தேன். அப்போது, சார் என்று ஒரு குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அனிருத் அவருடைய கையில் ஒரு ஜோடி செருப்பை தூக்கிக் கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தார்.  என்னடா இது, இப்போதுதான் ஓகே சொன்னார், அதற்குள் செருப்பை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறாரே என்று பயந்து போனேன்.

அவர் அருகில் வரும்போதுதான் தெரிந்தது, நான் அவருடைய அலுவலகத்தில் விட்டுச்சென்ற என்னுடைய செருப்பை தூக்கிக் கொண்டு வந்தார் என்பது. அவருடைய எளிமையை கண்டு வியந்துபோனேன்.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் தலைமுறையினர் சீனியர்களை மதிப்பது கிடையாது என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், அப்படியெல்லாம் கிடையாது.

அனிருத்தின் வளர்ப்பும், அவர் இருக்கிற சூழ்நிலையும்தான் அவருக்கு இந்த பணிவை கொடுத்திருக்கிறது. இத்தகைய குணாதிசயங்கள் கொண்டவர்கள் எவ்வளவு பெரிய நிலைக்கு உயர்ந்தாலும், அதிலிருந்து சறுக்கமாட்டார்கள் என்று கூறினார். 


Post your comment





Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions