தேசிய விருது வாங்க வேண்டும்! -தொகுப்பாளினி அனிஷ்யா பேட்டி

Bookmark and Share

தேசிய விருது வாங்க வேண்டும்! -தொகுப்பாளினி அனிஷ்யா பேட்டி

பல டிவி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் அனிஷ்யா. இவர் சமீபகாலமாக சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஆனால் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் அனிஷ்யாவுக்கு இல்லையாம். கேரக்டர் ரோல்களில் மட்டுமே நடித்து நிலையான நடிகையாக வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.

இதுபற்றி அனிஷ்யா மேலும் கூறும்போது, சின்னத்திரையில் நான் பல சேனல்களில் லைவ் புரோக்கிராம் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். பல வருடங்களுக்குப்பிறகு சினிமாவில் இருந்து வாய்ப்புகள் வந்தது.

அப்போது சிலர் ஹீரோயினாக நடிக்குமாறு அழைத்தனர். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. காரணம் ஹீரோயின் என்றால் சில வருடங்களோடு மார்க்கெட் போய் விடும்.

ஆனால் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்றால் லாங் லைப் இருக்கும். வயதானாலும்கூட ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டேயிருக்கலாம். அதனால்தான் கேரக்டர் நடிகை என்கிற ரூட்டை செலக்ட் பண்ணினேன்.

அந்த வகையில் லட்டுக்குள் பூந்தி என்ற படத்தில் முதன்முதலாக நடித்த நான், சமீபத்தில் வெளியான ஓ காதல் கண்மணி, 36 வயதினிலே வரை 15 படங்களில் நடித்து விட்டேன். இந்த படங்களில் பெரிய வேடம் இல்லை தான் என்றாலும் எதிர்காலத்தில் சேலஞ்சிங்கான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்பதெல்லாம் இல்லை. பிச்சைக்காரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். இப்படி கிடைக்கிற கேரக்டர்களில் நடித்து எனது கெபாசிட்டியை வளர்த்துக்கொண்டு வருகிறேன். நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்த பிறகு படிப்படியாக வெயிட்டான வேடங்களில் நடிப்பேன். மேலும் சீரியல்களில் நடிக்க நினைத்தேன்.

ஆனால் நான் குண்டாக இருந்ததால் நிரகாரித்தார்கள். அதனால் அதன்பிறகு உடம்பை குறைத்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். இப்படி டிவியில் நடிக்காமல் நான் சினிமாவிற்குள் வந்ததற்கு காரணம், பெருசா ஏதாவது சாதிக்கனும்.

லைப்ல கடைசியில் என்ன சாதிச்சோம்னு ஒன்று இருக்கு. அதனால்தான் நான் சினிமாவுக்கே வந்தேன். இப்ப இல்லேன்னாலும் ஒருநாளைக்கு பெரிய அளவில் சினிமாவில் சாதிப்பேன்.

முக்கியமாக, தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமே. அதற்காகத்தான் நடிப்பில் என்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறேன். சீரியலில் நல்ல பேமண்டு கிடைக்குதே நடிக்கலாமே என்று சிலர் செல்வார்கள் அப்படி டிவியில் நடித்தால் பெரிதாக சம்பாதிக்கலாம்.

ஆனால் பெரிய அளவில் பெயர் வாங்க முடியாது. அதனால்தான், டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நிறுத்திக்கொண்டு சினிமாவில் நடிக்க இறங்கி விட்டேன் என்று சொல்லும் அனிஷ்யா, இப்போது பாலாவின் தாரைத்தப்பட்டை படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறாராம்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions