அஞ்சானின்ஆச்சர்ய சாதனை

Bookmark and Share

அஞ்சானின்ஆச்சர்ய சாதனை

சூர்யா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படமாக மட்டுமல்லாமல் மாபெரும் தோல்விப்படமாகவும் ஆனது அஞ்சான்.

அதுமட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் அதிகமாக கேலியும் கிண்டலும் செய்யப்பட்ட படமும் அஞ்சான்தான்.  2014ல் வெளிவந்த அப்படத்தைத் தயாரித்து இயக்கிய லிங்குசாமிக்கு ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பின்னடைவை ஏற்படுத்திய படமும் அஞ்சான் படம்தான் என்று திரையுலகில் இன்றளவும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு மைனஸ்களைக் கொண்டுள்ள சூர்யாவின் அஞ்சான் திரைப்படம், காலங்கடந்து இப்போது  2015 ல் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்திருக்கிறது.

இப் படத்துக்காக, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன்’ பாடல் வீடியோ யு டியூப்பில் 1 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. இது சந்தேகமில்லாமல் புதிய சாதனைதான். சூர்யா பாடிய முதல் பாடலே இதுதான்.

தமிழ் சினிமா பாடல் வீடியோக்களைப் பொறுத்தவரை 1 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு முதல் இடத்தில் இருப்பது, 3 படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ வீடியோ பாடல்தான். அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய இந்தப்பாடலுக்கு அடுத்து இரண்டாம் இடத்தை அஞ்சானின் ‘ஏக் தோ தீன்’ பாடல் வீடியோ பிடித்திருக்கிறது.

தங்களின் அபிமான ஹீரோ பாடிய முதல் பாடலே சாதனை படைத்துள்ளதைக் கொண்டாடும்வகையில் இந்த விஷயத்தை ட்விட்டரில் சந்தோஷமாக பகிர்ந்து வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.


Post your comment





Related News
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
மாற்றான், அஞ்சான் பட வரிசையில் இணைந்த 24!
தெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்தோட வரி பாஸ்...
வீறு கொண்டு எழுந்து வாங்க லிங்கு!- பிறந்த நாளில் குவிந்த வாழ்த்துகள்
நான் பெரிய கோபக்காரி: சமந்தா
அஞ்சான் படத்துக்கும் கத்தி படத்துக்கும் ஒரு ஒற்றுமை!
சன்டிவியில் ஜில்லா, விஜய் டிவியில் மான்கராத்தே, ஜீ தமிழில் மஞ்சப்பை
ஆண்ட்ராய்டில் \'கத்தி\' படத்தின் கேம்!
நல்ல படங்களைப் பாராட்டும் இயக்குனர்கள்!
சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions