படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் நடிகை அஞ்சலி நீக்கம்!

Bookmark and Share

படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் நடிகை அஞ்சலி நீக்கம்!

நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜய்சேதுபதியுடன் நடித்த ‘இறைவி’ படம் திரைக்கு வருகிறது.

கன்னடத்தில் தர்ஷன் ஜோடியாக நடிக்க சக்கரவர்த்தி என்ற படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை சிந்தன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் தர்ஷன், அஞ்சலி நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டனர். இதற்காக அஞ்சலியை எதிர்பார்த்து துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் காத்திருந்தனர். ஆனால் அஞ்சலி நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் படக்குழுவினர் பொறுமை இழந்தனர். தயாரிப்பாளர் பணம் விரயமாவதாக புலம்பினார்.

பல மணி நேரத்துக்கு பிறகு தாமதமாக அஞ்சலி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த படக்குழுவினர் அஞ்சலியை அந்த படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்து அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற்றி விட்டனர். அஞ்சலிக்கு பதில் நடிகை தீபா சன்னதியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions