தமிழில் விட்ட இடத்தை பிடிக்க முயலும் அஞ்சலி

Bookmark and Share

தமிழில் விட்ட இடத்தை பிடிக்க முயலும் அஞ்சலி

தமிழ்த் திரையுலகில் சாவித்திரி, ரேவதிக்குப் பிறகு இன்றைய நடிகர்களில் அந்த வரிசையில் இடம் பிடிக்கக் கூடியவர்களில் தகுதியான ஒருவர் என பேசப்பட்டவர் அஞ்சலி. அறிமுகமான முதல் படத்திலிருந்து அவர் தமிழில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் வரை பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.

குடும்பப் பிரச்சனை காரணமாக சென்னையை விட்டுச் சென்று ஐதராபாத்தில் தஞ்சமடைந்தார். அங்கும் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் மறைவு வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

சில மாதங்கள் தொடர்ச்சியாக செய்திகளில் அடிபட்டு வந்தார். தற்போது அனைத்திலிருந்தும் விடுபட்டு மீண்டும் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.தற்போது தமிழில், ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் 'அப்பா டக்கர்' படத்திலும், விமல் ஜோடியாக 'மாப்ள சிங்கம்' படத்திலும் நடித்து வருகிறார்.

இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்தப் படங்களுடன் தொடர்ந்து தமிழில் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்து விட்டாராம்.

சேட்டை படத்திற்குப் பிறகு அஞ்சலி நடித்து வேறு எந்த தமிழ்ப் படமும் வெளிவராத இரண்டு ஆண்டு கால இடைவெளியை சரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். அடுத்து கற்றது தமிழ் படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய ராம் இயக்கத்தில், மம்முட்டி நாயகனாக நடிக்கும் படத்திலும் அஞ்சலியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். தனக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு அஞ்சலியே வாய்ப்பு கேட்டு வருவதாகவும் கூட கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions