
நடிகை அஞ்சலி தமிழில் ‘மாப்ள சிங்கம்’, ‘அப்பாடக்கர்’ படங்களில் நடிக்கிறார். ‘மாப்ள சிங்கம்’ படப்பிடிப்பை ஐதராபாத்துக்கு மாற்றினால்தான் நடிப்பேன் என்று நிர்ப்பந்திப்பதாகவும் இதனால் படிப்பிடிப்பு தாமதமாவதாகவும் இணையதளங்களில் செய்தி பரவியது.
இதற்கு பதில் அளித்து மாலைமலர் நிருபருக்கு போனில் அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:–
இணைய தளங்களில் என்னைப் பற்றி தவறாக வதந்திகள் பரவி உள்ளன. மாப்ள சிங்கம் படத்துக்கு 54 நாட்கள் கால்சீட் கொடுத்தேன். அதில் பாதி நாட்களை விரயம் செய்து விட்டனர். தெலுங்கில் தற்போது நான்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
இப்போது வந்து மீண்டும் மாப்ள சிங்கம் படத்தில் நடிக்க கேட்டனர். என்னிடம் தேதி இல்லை. ஆனாலும் தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் பேசி சில நாட்களை மாப்ள சிங்கம் படத்துக்காக ஒதுக்கினேன். ஐதராபாத்தில் தெலுங்கு படங்களில் நடிப்பதால் அதோடு மாப்ளசிங்கம் படத்திலும் நடிக்க முன் வந்தேன்.
என்னால்தான் மாப்ள சிங்கம் படம் தாமதம் ஆனதாக சொல்லப்படுவது உண்மைக்கு மாறானது. தாமதத்துக்கு காரணத்தை தயாரிப்பு தரப்பில்தான் கேட்க வேண்டும். நான் கொடுத்த தேதியில் படப்பிடிப்பை அவர்கள் நடத்தவில்லை.
கடவுள் அருளால் என் சினிமா மறு பிரவேசம் நன்றாக செல்கிறது. கால்ஷீட் குளறுபடிகள் செய்யாமல் நடிக்க வேண்டும் யார் மனதையும் புண்படுத்த கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கும் தெலுங்கு படக்குழுவினரிடம் கேட்டாலே இது தெரியும்.
எந்த தப்பும் செய்யாத என் மேல் வீண் பழி சுமத்தப்படுகிறது. ஐதராபாத்தில் அப்பாடக்கர் பாடல் காட்சி படப்பிடிப்பு என் நிர்பந்தத்தால் நடந்தது என்றும் செய்தி பரவி உள்ளது. அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கவில்லை பாங்காக்கில் நடந்தது. என்னை குறி வைத்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
Post your comment