அஞ்சலி கண்டிஷன் இயக்குனர் சரண்டர்

Bookmark and Share

அஞ்சலி கண்டிஷன் இயக்குனர் சரண்டர்

சித்தி மற்றும் இயக்குனர் களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதலையடுத்த தமிழ் படங்களே வேண்டாம் என்று தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார் அஞ்சலி. நடுத்தர குடும்ப பெண், கிராமத்து பெண்ணாகவே தமிழில் நடித்தார்.

அதை மனதில் வைத்தே டோலிவுட் இயக்குனர்களும் அவருக்கு குடும்ப பாங்கான வேடங்கள் தந்தனர். சக நடிகைகள் கிளாமர் காட்டி தூள்கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில் நீ மட்டும் தாவணி, சேலை கட்டி நடித்துக்கொண்டிருந்தால் சரிவராது என தோழிகள் அஞ்சலியை வெறுப்பேற்றினார்களாம்.

இதையடுத்து தன்னாலும் கிளாமர் வேடத்தில் நடிக்க முடியும் என்பதை உணர்த்துவதற் காக மாடர்ன் காஸ்டியூம் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டார். 

1 வருட இடைவெளிக்குபிறகு தமிழில் ‘அப்பா டக்கர்’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதிலும் அஞ்சலிக்கு கிராமத்து பெண் வேடம்தான்.

இது அஞ்சலி மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. அதை புரிந்துகொண்ட இயக்குனர் சுராஜ், என்னதான் கிராமத்து வேடமாக இருந்தாலும் நீங்கள் மாடர்ன் உடை அணிந்து நடிக்கும் காட்சி படத்தில் இடம்பெறும் என்று கூறி இருந்தாராம்.

அதன்படி கனவு காட்சி பாடல் எடுக்க திட்டமிட்ட இயக்குனர் ரவி-அஞ்சலி ஜோடியுடன் தாய்லாந்து பறந்தார். பாடல் காட்சியில் பக்கா கிளாமர் காஸ்டியூம் அணிந்து கலக்கி இருக்கிறாராம் அஞ்சலி.

இது படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என யூனிட்டார் தெரிவிக்கின்றனர். இதில் திரிஷா மற்றொரு நாயகியாக நடிக்கிறார். அவரது காட்சி ஏற்கனவே படமாகி விட்டதாம். 


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions