குடும்ப நடிகையாகி விட்டாராம் அஞ்சலி!

Bookmark and Share

குடும்ப நடிகையாகி விட்டாராம் அஞ்சலி!

கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என பல படங்களில் குடும்ப பாங்காக நடித்த அஞ்சலி, கலகலப்பு படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். அயிட்டம் நடிகைகளே அலறிக்கொண்டு ஓடும் அளவுக்கு இடுப்பை வளைத்து நெளித்து ஆடி, தனது குடும்ப இமேஜை டேமேஜ் பண்ணினார்.

அதனால் அதன்பிறகு அஞ்சலியை கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களுக்கு புக் பண்ணினார்கள். ஆனபோதும், குடும்பப் பிரச்னை காரணமாக அஞ்சலியின் மார்க்கெட் டவுன் ஆனது. இந்த நிலையில், தற்போது மறுபிரவேசம் செய்திருக்கும் அஞ்சலி, ஜெயம்ரவியுடன் நடிக்கும் அப்பாடக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

அந்த படத்தில் துளியளவு கிளாமரும் அவருக்கு இல்லையாம்.  இந்த நிலையில், அதற்கடுத்து விமலுடன் நடித்து வரும் மாப்ள சிங்கம் படத்திலும் கிராமத்து பெண்ணாகத்தான் நடிக்கிறார் அஞ்சலி.

அதோடு, சில காட்சிகளில் அவரை குடும்ப குத்து விளக்காகவே காண்பித்திருக்கிறார்களாம். அதனால், மறுபடியும் தான் குடும்ப நடிகையாகி விட்டதாக உற்சாகமாக கூறி வரும் அஞ்சலி, இனிமேல் இந்த இமேஜ் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப்போகிறாராம்.

அதனால் பழைய ஞாபகத்தில் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்கள், ஆங்காங்கே குளியல், முத்தம் என காட்சிகளை இணைத்து சொன்னால், அதற்கெல்லாம் கத்தரித்துக்கொண்டே வரும் அஞ்சலி, திரும்பவும் என் இமேஜை டேமேஜ் பண்ணாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறாராம் அஞ்சலி.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions