அழகாக வரப் போகிறாராம் அஞ்சலி...!

Bookmark and Share

அழகாக வரப் போகிறாராம் அஞ்சலி...!

அறிமுகமான முதல் படமான 'கற்றது தமிழ்' படத்திலேயே அட யாரிது, குடும்பப் பாங்காக, கலையாக, அழகாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட வைத்தவர் அஞ்சலி. தொடர்ந்து சில நல்ல படங்களில் நடித்து நமது பக்கத்து வீட்டுப் பெண் போல நம் மனதில் இடம் பிடித்தார்.

இயக்குனர் களஞ்சியம், அவருடைய சித்தி ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனையில் இடையில் சில காலம் காணாமல் போனார். இப்போது மீண்டும் வந்து தமிழில் ’அப்பா டக்கர், மாப்பிள்ளை சிங்கம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் சில படங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே நடுவில் கொஞ்சம் குண்டாகிப் போய் விட்ட அஞ்சலிக்கு, அதை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று ஆசை வந்ததாம். அதனால் தற்போது ரெகுலராக உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.

எப்படியும் முன்னர் இருந்தபடி உடலை நன்றாக இளைத்து, அதே சமயம் அழகும் குறையாமல் வர வேண்டும் என்று முடிவெடுத்து பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம்.

எத்தனை மும்பை ஹீரோயின்கள் வந்தாலும் நமது ரசிகர்களுக்கும் ஒரு ரேவதியோ, சினேகாவோ, அஞ்சலியோ எப்போதும் பிடிக்கும். இப்போதைக்கு அஞ்சலி தவிர அந்த ஹோம்லி ஹீரோயின்கள் பட்டியலில் இடம் பெறும் முழு தகுதியுடன் யாரும் வரவில்லை.

அதைப் புரிந்து கொண்டு அஞ்சலி இன்னும் கொஞ்ச நாளைக்கு காலத்தைத் தள்ளலாம் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். இதெல்லாம் அஞ்சலிக்கு புரிந்தால் சரி... 


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions