இறைவிக்காக இளைத்த அஞ்சலி

Bookmark and Share

இறைவிக்காக இளைத்த அஞ்சலி

தமிழ்த் திரையுலகில் நடுவில் கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த அஞ்சலி அடுத்த இன்னிங்ஸில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். “அப்பா டக்கர், மாப்பிள்ளை சிங்கம்” ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் நடிக்க உள்ளார். 


இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக அஞ்சலியை நன்றாக இளைக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து சுமார் 10 கிலோ வரை அஞ்சலி குறைந்திருக்கிறாராம்.


இடையில் காணாமல் போய் வந்த அஞ்சலி நிறையவே குண்டாகி விட்டார்.அப்பா டக்கர், மாப்பிள்ளை சிங்கம் படங்களின் புகைப்படங்களைப் பார்த்தாலே அது தெரியும். ஆனால், அந்தப் படத்தின் இயக்குனர்கள் அதைப் பெரிதாக நினைக்கவில்லை.

ஒரு வேளை கதைப்படி அஞ்சலி குண்டாக இருந்தால் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. இறைவி படத்துடன் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது படத்திலும் அஞ்சலியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.


மாப்பிள்ளை சிங்கம் வெளிவந்ததும் தன் அடுத்த இன்னிங்ஸ் வெற்றிகரமாகவே ஆரம்பமாகும் என அஞ்சலியும் நினைத்து வருகிறாராம்.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions