அஞ்சலிக்கு செக்யூரிட்டி தேவையில்லையாம்!

Bookmark and Share

அஞ்சலிக்கு செக்யூரிட்டி தேவையில்லையாம்!

அப்பாடக்கர், மாப்ளசிங்கம், இறைவி படங்களில் நடித்து வரும் அஞ்சலி, சில தெலுங்கு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில், அவர் எந்த படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றாலும் அவருக்கு இரண்டு பாடிகார்டுகள் அவரைத் தொடர்ந்து செல்வதாக சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வருகின்றன. அதனால் அஞ்சலியை சினிமாக்காரர்களேகூட நெருங்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றி அஞ்சலிதரப்பை விசாரித்தால், இப்போதுவரை அஞ்சலி தனது பாதுகாப்புக்காக செக்யூரிட்டி என்ற பெயரில் பாடிகார்டு யாரையும் நியமித்துக்கொண்டதில்லை என்கிறார்கள்.

ஆனால் அவர் நடித்து வந்த சில படங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற ஏரியாக்கள் பிரச்னைக்குரியவை என்பதால் அந்த படக்குழுவினரே யாராவது வெளிநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பந்தோபஸ்து போட்டிருந்தனர்.

அதனால் அந்த படங்களில் அஞ்சலி நடித்தபோது அவர் செல்லும் இடங்களில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க அங்கு நின்று செக்யூரிட்டிகள் அவரை தொடர்ந்து வந்திருக்கலாம். அதை வைத்துக்கொண்டுதான் இப்படியொரு செய்தி பரவியிருப்பதாக சொல்கிறார்கள்.

மேலும், பாடிகார்டு வைத்துக்கொள்ளும் அளவுக்கு அஞ்சலிக்கு வேண்டாதவர்கள் யாரும் இல்லை. தமிழ், தெலுங்கு சினிமா எப்போதுமே அவருக்கு பாதுகாப்பான உலகமாகவே இருந்து வருகிறது என்கிறார்கள்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions