பார்ட்டி பழக்கமெல்லாம் இல்லை - அஞ்சலி

Bookmark and Share

பார்ட்டி பழக்கமெல்லாம் இல்லை - அஞ்சலி

சில மாதங்களுக்கு முன் நடிகை அஞ்சலி, ஐதராபாத்தில் ஒரு பார்ட்டியில் குடித்து விட்டு கலாட்டா செய்தார் என்றெல்லாம் பரபரப்பாக செய்திகள் வந்தன. ஆனால், தனக்கு பார்ட்டிக்கெல்லாம் செல்லும் பழக்கமில்லை என்கிறார் அஞ்சலி.

அப்படி பார்ட்டிக்குச் செல்லும் அளவிற்கு நேரம் கிடைத்தால் வீட்டில் உட்கார்ந்து கொண்டு படங்களைப் பார்த்து ரசிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சில  வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தற்போது விமல் ஜோடியாக 'மாப்பிள்ளை சிங்கம்', ஜெயம் ரவி ஜோடியாக 'அப்பா டக்கர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிப்பதற்குக் கதை கேட்டு வருகிறாராம்.

தமிழில் 'அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்த போது கிடைத்த நல்ல பெயரை மீண்டும் வாங்கி ஆக வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

தற்போது நடித்து வரும் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதால் அந்தப் படங்கள் மீண்டும் தனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றும் நம்புகிறாராம்.

தமிழில் மட்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ள அஞ்சலி, தற்போது தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் 'சித்ரங்கதா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போதுள்ள போட்டியில் அஞ்சலி எந்த அளவிற்கு தாக்குப் பிடிக்கப் போகிறார் என்பது போகப் போகத்தான் தெரியும்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions