அஞ்சலிக்கு திருப்திக்கொடுத்த காமெடி ஹீரோயினி வேடம்!

Bookmark and Share

அஞ்சலிக்கு திருப்திக்கொடுத்த காமெடி ஹீரோயினி வேடம்!

செகண்ட் இன்னிங்சில் அஞ்சலியை மீண்டும் கோடம்பாக்கத்துக்கு கொண்டு வந்த படம் அப்பாடக்கர். சந்தானத்தின் காமெடி டயலாக்கில் இருந்து இந்த டைட்டில் எடுக்கப்பட்டது.

இப்போது அந்த டைட்டிலை சகலகலா வல்லவன் அப்பாடக்கர் என்று மாற்றியுள்ளனர். சுராஜ் இயக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவி நாயகன் என்றதும் வேகவேகமாக ஓடிவந்து கதைகூட கேட்காமல் கமிட்டானார் அஞ்சலி.

ஆனால் அதன்பிறகுதான் த்ரிஷாவும் அந்த படத்தில் இருக்கிறார் என்கிற விவரம் தெரிந்திருக்கிறது. என்றபோதும், தானும் முன்னணி நடிகைதான் என்பதால் தன்னை டம்மி பண்ணமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நடித்து வந்தார் அஞ்சலி.

ஆனால் கதைப்படி பார்த்தால் த்ரிஷாவைதான் ஜெயம்ரவி காதலிப்பாராம். பங்காளிகளாக நடிக்கும் ஜெயம்ரவி-சூரி இருவரின் முறைப்பெண்ணாக அஞ்சலி நடித்திருக்கிறாராம்.

அந்த வகையில், ஜெயம்ரவியை விட சூரிதான் அஞ்சலியை அதிகமாக சுற்றி வந்து கலாய்ப்பாராம். அதனால் லவ் டிராக்கை விட அஞ்சலிக்கு காமெடி டிராக்தான் அதிகமாக உள்ளதாம். அதோடு ஜெயம்ரவி-சூரியுடன் இணைந்து ஒரு செமத்தியான குத்துப்பாட்டு அஞ்சலிக்கு உள்ளதாம்.

அதனால் இந்த படத்தில் பாவாடை தாவணி கெட்டப்பில் நடித்துள்ள அஞ்சலி, பக்கா கிராமத்து பெண்ணாக வரிந்து கட்டி ஆடியிருப்பதோடு, தான் இரண்டாவது ஹீரோயினி என்பது தெரியாத அளவுக்கு தனது கவர்ச்சி கலந்த காமெடி நடிப்பால் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் நடித்திருக்கிறாராம்.

அதனால் இந்த கிராமத்து வேடம் தன்னை தமிழ் ரசிகர்களிடம் முழுசாக கொண்டு சேர்க்கும் என்று கூறி வருகிறார் அஞ்சலி.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions