கன்னடத்தில் சொந்தக் குரலில் அஞ்சலி

Bookmark and Share

கன்னடத்தில் சொந்தக் குரலில் அஞ்சலி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தான் நடிக்கும் கன்னடப் படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேச உள்ளார். தமிழிலும், தெலுங்கிலும் சொந்தக் குரலில் பேசும் அஞ்சலிக்கு தாய் மொழி தமிழ்தான் என்றாலும், அவருடைய தமிழ்ப் பேச்சிலும் ஒரு வசீகரம் இருக்கும்.

வட இந்திய நடிகைகளைப் போல் அந்த அளவிற்கு சிகப்பாக இல்லையென்றாலும், அஞ்சலியின் மாநிறமும், அவருடைய பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றமும் அவருக்கு இங்கும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

திரையுலகில் அறிமுகமான காலகட்டத்திலேயே ஒரு கன்னடப் படத்தில் அஞ்சலி நடித்திருந்தார். அதன் பின் தமிழிலும், தெலுங்கிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது கன்னடத்தின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த வாய்ப்பைத் தவற விடாமல் நடித்து முடித்து விட்டார்.

இப்போது படத்தின்  டப்பிங் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இயக்குனர் அஞ்சலி சொந்தக் குரலில் பேசினால் நன்றாக இருக்கும் என்று சொன்னதையடுத்து அஞ்சலியும் சொந்தக் குரலில் பேச ஆரம்பித்துவிட்டாராம்.

தமிழ், தெலுங்கு படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் அஞ்சலி நடித்தது போல் விரைவில் மலையாளத்திலும் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions