ஊர் சுற்றி புராணம் படத்தில் மீண்டும் நடிப்பாரா அஞ்சலி?

Bookmark and Share

ஊர் சுற்றி புராணம் படத்தில் மீண்டும் நடிப்பாரா அஞ்சலி?

பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, கருங்காலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் அஞ்சலியை கதாநாயகியாக வைத்து ‘ஊர் சுற்றி புராணம்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். இதன் படப்பிடிப்பில் களஞ்சியத்துக்கும் அஞ்சலிக்கும் மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து அஞ்சலி வெளியேறி விட்டார். இதனால் அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க கில்டு போன்ற அமைப்புகளில் களஞ்சியம் புகார் செய்தார். அஞ்சலி நடிக்க மறுப்பதால் தனக்கு ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், 20 நாட்கள் ஒதுக்கி தனது படத்தில் அவர் நடித்துக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால் அஞ்சலி பிடிவாதமாக மறுத்துவிட்டார். வேறு படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் அஞ்சலி மீண்டும் நடிப்பாரா? என்று டைரக்டர் களஞ்சியத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அஞ்சலி நடிக்க மறுத்ததால் ‘ஊர் சுற்றி புராணம்’ படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தில் பெரிய தொகையை முதலீடு செய்து நானே தயாரித்தேன். படத்தை அவர் முடித்துக்கொடுக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட சங்கங்களிடம் புகார் அளித்து இருக்கிறேன்.

அஞ்சலியிடம் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும், அதுவரை சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் சங்க நிர்வாகிகள் என்னிடம் கூறி இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்து உள்ளனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுப்பார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகே அஞ்சலி மீண்டும் நடிப்பாரா? என்பது தெரியவரும்.

தற்போது படங்களில் தீவிரமாக நடித்து வருகிறேன். ‘களவு தொழிற்சாலை’ என்ற படத்தில் உளவு துறை அதிகாரியாக வந்தேன். சமீபத்தில் வெளியான ‘கோடை மழை’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன் இந்த படத்தை விஜய் சேதுபதி பார்த்து எனக்கு போலீஸ் வேடம் நன்றாக பொருந்தி இருப்பதாகவும், தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த நடிகர் கிடைத்துள்ளார் என்றும் பாராட்டினார்.

மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்கிறேன். ‘முந்திரிக்காடு’ என்ற படத்தை இயக்கியும் வருகிறேன்.

இவ்வாறு டைரக்டர் களஞ்சியம் கூறினார்.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions