எனக்கு திருமணம் நடக்கவில்லை, வதந்ததியை பரப்பாதீர்கள்- அஞ்சலி வருத்தம்

Bookmark and Share

எனக்கு திருமணம் நடக்கவில்லை, வதந்ததியை பரப்பாதீர்கள்- அஞ்சலி வருத்தம்

நடிகை அஞ்சலி குடும்ப பிரச்சினைகளில் இருந்து மீண்டு ஜெயம் ரவியுடன், ‘சகலகலா வல்லவன்’ படத்தில் நடித்தார். தற்போது ‘மாப்ள சிங்கம், தரமணி, இறைவி’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். தெலுங்கிலும் மூன்று படங்களை வைத்துள்ளார். 

இந்நிலயில் அஞ்சலி ஒரு தொழில் அதிபரை அவர் காதலித்து ரகசிய திருமணம் செய்துவிட்டார் என வத்ந்திகள் பரவி வருகின்றன. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். 

ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், “ என்னைப்பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை இருப்பதாகவும் வதந்திகளை பரப்புகிறார்கள்.

இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. திருமணம் உடனடியாக செய்து கொள்ளமாட்டேன். என் முழு கவனமும் இப்போது சினிமாவில் தான் இருக்கிறது. திரையுலகம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது. இங்கு குனிய குனிய குட்டுவார்கள். 

எதிர்த்து நின்றால் ஓடிப்போய்விடுவார்கள். என்னை சுற்றி அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் என் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. எதிர்கால திட்டங்கள் என் கையில் இல்லை கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்”. இவ்வாறு கூறினார் அஞ்சலி.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions