பரபரப்பு வளையத்துக்குள் வந்த அஞ்சலி!

Bookmark and Share

பரபரப்பு வளையத்துக்குள் வந்த அஞ்சலி!

அங்காடித்தெரு படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையானவர் அஞ்சலி. அதையடுத்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, சேட்டை என நடித்து வந்தவர், சித்தியுடன் ஏற்பட்ட சலசலப்புக்குப்பிறகு ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். இருப்பினும், பின்னர் மீண்டும் தமிழில் நடிக்கும் ஆர்வத்தில் சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்.

அதையடுத்து ஜெயம்ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்ள சிங்கம் படங்களில் நடித்துள்ள அஞ்சலி, இப்போது ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் நடிக்கிறார். இதையடுத்து கோலிவுட்டில் ஆழக்காலூன்ற வேண்டும் என்பதற்காக இப்போது தனது பெருத்த உடம்பையும் ஸ்லிம் பண்ணி கோதாவில் இறங்கியுள்ளார் அஞ்சலி.

இந்த நேரத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அஞ்சலி ஒரே அறையில் தங்கியிருந்ததாக தற்போது செய்திகள் உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதை அஞ்சலிதரப்பு பகிரங்கமாக மறுத்துள்ளது. அதோடு, அஞ்சலி ஆந்திராவில் இருக்கிறார்.

அவர் சென்னைக்கு வந்தே சில மாதங்களாகி விட்டது. அதனால் இந்த செய்தி யாரோ கொளுத்தி போட்ட வதந்திதான் என்கிறார்கள். ஆக, ரீ-என்ட்ரியான ஆனபிறகு சத்தமில்லாமல் இருந்த அஞ்சலி தற்போது மீண்டும் பரபரப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார்.

 


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions