மாப்பிள்ளை சிங்கம் - சிக்கல் தரும் அஞ்சலி

Bookmark and Share

மாப்பிள்ளை சிங்கம் - சிக்கல் தரும் அஞ்சலி

பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும், வினியோகத்தும் உள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் மாப்பிள்ளை சிங்கம் இந்தப் படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதாம்.

ஆனால், அஞ்சலி கால்ஷீட் தராமல் இழுத்தடித்து படத்திற்கு சிக்கலைத் தருவதாகச் சொல்கிறார்கள். அஞ்சலி கால்ஷீட் தராத காரணத்தால் இந்த மாதம் வெளிவந்தாக வேண்டிய படத்தை  மேலும் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம்.

ஆனால், அஞ்சலியே வேறு விதமான தகவலைச் சொல்கிறார். இந்தப் படத்திற்காக 50 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆனாலும், திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தாமல் எனது கால்ஷீட்டை வீணாக்கி விட்டார்கள் என்கிறார். வேண்டுமானால் கால்ஷீட் தருகிறேன், ஆனால், படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாராம். அதற்கு தயாரிப்பாளர் தரப்பு தயாராக இல்லை என்றும் சொல்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகம் மறந்து போன அஞ்சலியை மாப்பிள்ளை சிங்கம் படத்தின் மூலம் மீண்டும் அழைத்து வந்ததே அந்தத் தயாரிப்பு நிறுவனம்தான். அதற்கு அஞ்சலி தரும் பரிசு இதுதானா என்கிறார்களாம் அவர்கள். இதனால் அஞ்சலியை மீண்டும் தமிழில் ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம்.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions