மாறாத அஞ்சலி... மாறிய தயாரிப்பாளர்கள்...!

Bookmark and Share

மாறாத அஞ்சலி... மாறிய தயாரிப்பாளர்கள்...!

தமிழ்த் திரையுலகில் அடுத்த சாவித்ரி, அடுத்த ரேவதி என்று அறிமுகமான காலத்தில் பேசப்பட்டவர் அஞ்சலி. கவர்ச்சி காட்டாத அருமையான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள் என மற்ற நடிகைகளிடமிருந்து  வித்தியாசப்பட்டு இருந்தார். ஆனால், அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட மோதலால் திடீரென தமிழ்நாட்டை விட்டுச் சென்று ஆந்திராவில் தஞ்சமடைந்தார். அங்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றார்.

அதனால் அங்கும் அவரை புதுப் படங்களில் ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்கினார்கள். இந்த சூழ்நிலையில் மீண்டும் அஞ்சலியை தமிழ்ப் படங்களில் நடிக்க அழைத்து வந்தார்கள்.

“அப்பா டக்கர், மாப்பிள்ளை சிங்கம்” ஆகிய படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். இங்கும் சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல் இரண்டு தயாரிப்பாளர்களையும் நிறையவே கஷ்டப்படுத்தியிருக்கிறார்.

அதோடு முன்பு மாதிரி நடந்து கொள்ளாமல் ரொம்பவே பந்தா செய்தாராம். நடிக்க அழைத்து வந்தாயிற்று பொறுத்துத்தான் போக வேண்டும் என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படத்தை முடித்தால் போதும் என்று இருந்திருக்கிறார்கள்.

இதனிடையே மேலும் சில தமிழ்ப் படங்களில் அஞ்சலியை நடிக்க வைக்கலாம் என சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அஞ்சலியின் புரியாத நடவடிக்கை காரணமாக அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள் கூட அவர்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்களாம்.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions