அஞ்சலியை எதிரியாக பார்க்கும் ப்ரியாஆனந்த்!

Bookmark and Share

அஞ்சலியை எதிரியாக பார்க்கும் ப்ரியாஆனந்த்!

லட்சுமிமேனனுக்கு எப்படி கடல் கெளதமுடன் சிப்பாய் என்ற ஒரு படம் மட்டுமே உள்ளதோ, அதேபோல்தான் ப்ரியாஆனந்துக்கும் கடல் கெளதமுடன் வை ராஜா வை என்ற படம் மட்டுமே உள்ளது.

ஆனால் இந்த படத்தில் அவர் கதாநாயகி என்றபோதும் டாப்சியும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். அதனால், தனக்கு கிடைக்க வேண்டிய மொத்த பெயரும் டாப்சிக்கு போய் விடுமோ என்கிற பயம் ப்ரியாஆனந்துக்கு இருந்து கொண்டிருக்கிறது.

மேலும், புதிய படங்களை கைப்பற்ற திரைக்குப்பின்னால் படு தீவிரம் காட்டியும் வருகிறார் ப்ரியாஆனந்த். ஆனால், அப்படி அவர் சான்ஸ் கேட்டு செல்லும் கம்பெனி படங்களில் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளின் பெயரே இடம் பிடித்திருக்கிறதாம்.

முன்னதாக, விமல் நடித்து வரும் மாப்ள சிங்கம் பட வாய்ப்பை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தாராம் ப்ரியாஆனந்த். ஆனால், திடீரென்று அஞ்சலி இடைமறித்து அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டாராம்.

அவர் விடாப்பிடியாக முயற்சி செய்தபோதும், விமல்-அஞ்சலி காம்பினேசனில் உருவான கலகலப்பு படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் மீண்டும் அவர்கள் இணைந்தால் படம் ஹிட்டாக அதிக வாய்ப்புள்ளது என்பதை சொல்லி ப்ரியா ஆனந்தை கழட்டி விட்டு விட்டார்களாம்.

ஆக, அஞ்சலிதான் விமலுடன் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்து விட்டார் என்று அவரை எதிரியாட்டம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் ப்ரியாஆனந்த். 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions