சிம்புவுக்கு தங்கையான விஜயசேதுபதியின் ஜோடி!

Bookmark and Share

சிம்புவுக்கு தங்கையான விஜயசேதுபதியின் ஜோடி!

ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயசேதுபதி- கிருஷ்ணா இணைந்து நடித்த படம் வன்மம். இந்த படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க, விஜயசேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலிராவ் நடித்திருந்தார்.

ஆனால், அவர்களுக்கிடையே டூயட் எதுவும் கிடையாது. சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார் அஞ்சலிராவ். அவரது கேரக்டர் பெரிதாக ரீச் ஆகாததால் இயக்குனர்களின் கவனத்துக்கு வராமல் இருந்த அஞ்சலிராவ், தொடர்ந்து புதிய படங்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு அடுத்து யாரும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் வேடம் கிடைத்திருக்கிறது.

ஆனால், முந்தைய படத்தில் கதாநாயகியாக நடித்ததை விடவும் இப்படத்தில் அஞ்சலிராவுக்கு அதிக காட்சிகள் உள்ளதாம். அதனால் இந்த படம் என்னை ரசிகர்களுக்கு முழுசாக அடையாளம் காட்டும் என்கிறார் அவர்.


Post your comment





Related News
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி
பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions