தமிழில் டப் ஆகிறது அஞ்சலி, சமந்தா நடித்த தெலுங்கு படம்

Bookmark and Share

தமிழில் டப் ஆகிறது அஞ்சலி, சமந்தா நடித்த தெலுங்கு படம்

2013ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் சீத்தம்மா வைகிட்டோ சிரிமலே சிட்டு. இதில் வெங்கடேஷ், மகேஷ்பாபு, சமந்தா, அஞ்சலி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடித்திருந்தனர். மணிசர்மா இசை அமைத்திருந்தார்.

ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கி இருந்தார். 100 கோடிக்கு மேல் வசூலித்து வெள்ளிவிழா கொண்டாடிய படம். அண்ணனுக்கு பெண் பார்க்க போன இடத்தில் பெண்ணின் தங்கையை தம்பி காதலிப்பது மாதிரியான கலாட்டா கதை.

வெங்கடேஷ் அண்ணனாகவும், மகேஷ் பாபு தம்பியாகவும் நடித்திருந்தனர். வெங்கடேஷ் ஜோடியாக அஞ்சலியும், மகேஷ்பாபு ஜோடியாக சமந்தாவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை விஜி கிரியேஷன் என்ற நிறுவனம் ஆனந்தம் ஆனந்தமே என்ற பெயரில் கடந்த ஆண்டே டப் செய்திருந்தது.

ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். ஆனால் தற்போதுதான் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த மாத இறுதியில் வெளிவருகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions