கணவர் ஒளிப்பதிவில் நடிக்கும் மனைவி - 'நீநா' தரும் ஆச்சர்யம்..!

Bookmark and Share

கணவர் ஒளிப்பதிவில் நடிக்கும் மனைவி - 'நீநா' தரும் ஆச்சர்யம்..!

மலையாள குணச்சித்திர நடிகரான மறைந்த அகஸ்டின் என்பவர் மகள் தான் ஆன் அகஸ்டின். இவரைப்பற்றிய ஒரு சுவையான முன்குறிப்பை பார்த்துவிட்டு விஷயத்துக்கு செல்வோம்..

மலையாள படங்களில் நடித்துவரும் இவருக்கும் மலையாள பட ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜானுக்கும் கடந்த 2013 பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் தனது காதலர் தமிழ் படத்தில் பணியாற்றிய பிறகுதான் அவரை திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக நின்றார்  ஆன் அகஸ்டின்..    ஒரு வழியாக சசிகுமார் நடித்த பிரம்மன் படத்திற்கு, ஜோமோன் ஒளிப்பதிவாளரான பின்னரே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது மலையாளத்தில் லால்ஜோஸ் இயக்கிவரும் ’நீநா’ என்கிற படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் தி. ஜான் தான். இதில் இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் ஆன் அகஸ்டின்.

அந்தவகையில் கணவரின் ஒளிப்பதிவில் நடிக்கும் பாக்கியத்தையும் பெற்றுவிட்டார். இந்தப்படத்தில் நளினி என்கிற கேரக்டரில் ஆன் அகஸ்டினும் நீனா என்கிற கதாபாத்திரத்தில், அறிமுக நடிகை தீப்தி சதியும் நடிக்கிறார்கள்..


Post your comment





Related News
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் - பெங்களூரு விரைந்தார் ரஜினி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions