அண்ணாமலை எழுதிய இயற்கையை கடவுளாக சித்தரிக்கும் பாடல்!

Bookmark and Share

அண்ணாமலை எழுதிய இயற்கையை கடவுளாக சித்தரிக்கும் பாடல்!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது தம்பி திலீபன் நாயகனாக நடித்த படம் வத்திக்குச்சி. அந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார்.

அதையடுத்து தற்போது சிவசக்தி இயக்கத்தில் குத்தூசி என்ற படத்தில் நடித்துள்ளார் திலீபன். சமூகம் சார்ந்த கதையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு தமிழ்ப்படம் கண்ணன் இசையமைக்க, அண்ணாமலை அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். இயற்கைக்கும், மனிதனுக்குமிடையே உள்ள நெருக்கம்தான் வாழ்வியலை கூட்டும், மனித வாழ்வை வளமாக்கும்.

இயற்கைக்கு மாறாக நாம் செயல்பட்டால் அதுவே மனித வாழ்க்கைக்கு தீங்காகி விடும் என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயற்கையை கடவுளாக சித்தரிக்கும் ஒரு பாடல இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

முக்கியமாக, இயற்கைக்கு மாறாக, பிளாஸ்டிக்கை எரிப்பது, பாட்டிலை உடைப்பது போன்ற எதிர்மறையான விசயங்களை செய்தால், இந்த பூமியில் மனித இனம் வாழ முடியாத சூழல் ஏற்படும்.

மனிதனின் வாழ்க்கை காலம் குறைந்து விடும் என்பது போன்ற சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை அடிநாதமாக வைத்து, இந்த பாடலை எழுதியிருக்கிறாராம் அண்ணாமலை.


Post your comment





Related News
பிரபல திரைப்பட பாடலாசிரியர் திடீர் மரணம்!
கௌரவ டாக்டர் பட்டம் நிகழ்வு
அண்ணாமலையை பாராட்டிய சுராஜ்!
அண்ணாமலை பாடலை அனிருத் பாடினார்!
திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் இளையராஜா!
மராட்டிய மாநில தமிழ்ச்சங்க தலைவர் அண்ணாமலைக்கு நடிகை மனோரமா விருது வழங்குகிறார்..!
இயக்குனர் அட்லிக்கு 2 விருதுகள்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions