ரீமேக் படம் மூலம் இயக்குனராகும் ஆண்டனி

Bookmark and Share

ரீமேக் படம் மூலம் இயக்குனராகும் ஆண்டனி

தமிழில் 'காக்க காக்க' படம் மூலம் படத் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஆண்டனி. அவருடைய ஸ்டைலிஷான கட்டிங் மூலம் படத் தொகுப்பில் பல புதுமைகளைச் செய்து படத் தொகுப்பாளருக்கும் பெருமை சேர்த்தவர்.

தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, விஜய், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு படத் தொகுப்பாளராகவும் பணி புரிந்து வருகிறார்.

சமீப காலமாக இவருடைய படத் தொகுப்பில் வரும் படங்கள் நீளமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. விரைவில் இயக்குனராகவும் மாற உள்ளார் ஆண்டனி. மலையாளத்தில் ஜாய் மாத்யூ இயக்கத்தில் லால், சீனிவாசன், சஜிதா மற்றும் பலர் நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'ஷட்டர்' படத்தை தமிழில் ரீமேக் செய்து ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்க, அனு மோள் நாயகியாக நடிக்க உள்ளார். மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒரு படம் முழுமையடைவது படத் தொகுப்பாளரின் மேஜை மீதுதான் என்று சொல்வார்கள். அப்படி பல முன்னணி இயக்குனர்களின் பல படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணிபுரிந்த ஆண்டனி, அவர் இயக்கும் படத்தையும் ஒரு சிறப்பான படமாக கொடுப்பார் என்று நம்பலாம். ஆனால், படத் தொகுப்பாளருக்கே உரிய 'நறுக்' கை படத்திலும் காட்டுவது அவருடைய இயக்குனர் அறிமுகத்திற்கும் நலமாக இருக்கும்.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமிர் பிடிச்சவன் விஜய் ஆண்டனி செய்யும் அசத்தலான செயல் - எதிர்ப்பரப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions