19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி

Bookmark and Share

19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி

ஆண்டனி புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'ஆண்டனி'. அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் இயக்கும் இப்படத்தில் ‘சண்டக் கோழி’ புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டார்.

சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது. மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.

தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ் சினிமாவை ‘ஆண்டனி’ அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions