அரசியலுக்கு வரும் எண்ணமில்லை: நடிகர் அனுபம் கெர் திட்டவட்டம்

Bookmark and Share

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை: நடிகர் அனுபம் கெர் திட்டவட்டம்

அரசியல் கட்சியில் சேரும் எண்ணமுமில்லை என பிரபல இந்தி நாடகம் மற்றும் சினிமா நடிகரான அனுபம் கெர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து விட்டதாகக் குற்றம்சாட்டி எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப அளித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அனுபம் கெர், அவர்களுக்குத் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

எழுத்தாளர்களின் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனுபம் கெர் தலைமையில் கடந்த மாதம் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தி திரையுலகைச் சேர்ந்த மதுகர் பண்டார்கர், அசோக் பண்டிட், பிரியதர்ஷன், மனோஜ் ஜோஷி, அபிஜீத் பட்டாச்சார்யா, எழுத்தாளர் மது கிஷ்வார் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

இறுதியாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். அதில் நடிகர் கமல்ஹாசன், சேகர் கபூர், வித்யா பாலன், ரவீணா டாண்டன், விவேக் ஓபராய், எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள், இசையமைப்பாளர்கள் என 90 பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

குடியரசுத் தலைவரிடம் அளித்த மனுவை செய்தியாளர்கள் முன்னிலையில் அனுபம் கெர் வாசித்தார். அதில், "நாட்டில் படுகொலை நடைபெறுவது தவறானது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் இதனை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதுதான் எங்களைக் கவலையடையச் செய்கிறது' என்று முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனுபம் கெர், "தேவையற்ற போராட்டத்தை நடத்துபவர்களின் நோக்கம் மிகவும் தவறானது. சில வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள சிலரும் இதனைத் தூண்டி விடுகின்றனர். நானும் பல எழுத்தாளர்கள், கலைஞர்களை சந்தித்துப் பேசி வருகிறேன். அவர்கள் அனைவரும் நாட்டில் சகிப்புத்தன்மை குறைத்துவிட்டது என்பதை ஏற்கவில்லை. இதனை உணர்த்தவே பேரணியாகச் சென்று ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளோம்' என்றார்.

இந்நிலையில், அனுபம் கெரின் டுவிட்டர் பக்கத்தில் ‘உங்களுக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வம் உள்ளதா?’ என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அனுபம் கெர், அரசியலில் குதிக்கும் எண்ணம் எனக்கு அறவே இல்லை. ஒரு நடிகனாகவும், ஆசிரியராகவும், உத்வேகம் அளிக்கும் பேச்சாளராகவும் நான் மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன்.

எனக்கு அரசியல் தொடர்பான எந்த சித்தாந்தமும் கிடையாது என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ஆபாசத்தை பற்றிய அனுபமாவின் பகீரங்கமான கருத்து!
எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
நடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை! - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்
அவர்களை தூக்கில் போட வேண்டும்! நடிகர் எஸ்.வி.சேகர் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions