காஷ்மீர் பண்டிட்களுக்கு தனியாக ஸ்மார்ட் நகரம்: பிரபல நடிகர் அனுபம் கெர்

Bookmark and Share

காஷ்மீர் பண்டிட்களுக்கு தனியாக ஸ்மார்ட் நகரம்: பிரபல நடிகர் அனுபம் கெர்

காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களுக்கு தனியாக ஸ்மார்ட் நகரம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என பிரபல நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார்.

ரூட்ஸ் இன் காஷ்மீர் என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் ”சட்டப்பிரிவு 370, பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் இடம் வாங்குவதை தடை செய்கிறது.

எனவே அந்த சட்டத்தை நீக்கவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட பண்டிட்களை அங்கு மீண்டும் குடி அமர்த்தவேண்டும். அதற்காக தனியாக ஒரு ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் மத்திய அரசு காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கும் யோசனையை முன் மொழிந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் அம்மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி குடியிருப்பு பகுதி என்ற திட்டத்தை நிராகரித்து உள்ளார் அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயீது. ஆனால் பண்டிட்கள் திரும்ப காஷ்மீர்ல் வந்து குடியேர அனைத்து வசதிகளும் செய்யப்படும். ஆனால் தனியாக இல்லாமல் அனைவருடனும் சேர்ந்து வசிக்கும் படியான திட்டமாகவே அது இருக்கும். பண்டிட்டுகளும் அதேதான் விரும்புவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

மக்களை பிரித்து வைத்திருப்பதன் மூலமே அரசியல் கட்சிகள் லாபம் அடைய முடியும் என்பதால் குறிப்பிட்ட மக்களுக்கு தனி குடியிருப்பு பகுதிகள் என்ற திட்டத்தை முன்வைக்கின்றன.

ஆனால் இது மிகவும் ஆபத்தான வழிமுறை. இதே கோரிக்கையை எல்லா சாதி, மதத்தினரும் முன்வைத்தால் என்ன ஆவது என்று சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ஆபாசத்தை பற்றிய அனுபமாவின் பகீரங்கமான கருத்து!
எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
என் ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணாங்க, இருந்தாலும் தமிழில் பேசுவேன், ஏனெனில்? அனுபமா ஓபன் டாக்
நடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை! - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்
அவர்களை தூக்கில் போட வேண்டும்! நடிகர் எஸ்.வி.சேகர் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions