உத்தா பஞ்சாப் படம் வெளியாவதில் சிக்கல்!

Bookmark and Share

உத்தா பஞ்சாப் படம் வெளியாவதில் சிக்கல்!

இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘உத்தா பஞ்சாப்’. போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர். இந்த படம் வருகிற 17-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, ‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. இதனால், வேதனை அடைந்த 43 வயது தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், ‘‘திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நீக்குவது, துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்வதற்கு சமம்’’ என்று டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில், மேலும் அவர் தன்னுடைய அதிருப்தியை டுவிட்டரில் கொட்டி தீர்த்துள்ளார். அதில், ‘‘இங்கு சுதந்திர உணர்வு கொஞ்சம் கூட கிடையாது. சர்வாதிகார ஆட்சி நிறைந்த வட கொரியாவில் வாழ்வதை போல் உணர்கிறேன்.

‘உத்தா பஞ்சாப்’ படத்தை விட நேர்மையான படம் வேறு ஏதும் கிடையாது. இந்த படத்தை எதிர்ப்பவர்கள், போதைப்பொருட்களை ஊக்குவிக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே, ‘உத்தா பஞ்சாப்’ பட விவகாரத்தில் தணிக்கை குழுவை விமர்சித்தும், அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும் திரைப்பட இயக்குனர்கள் கரண் ஜோகார், மகேஷ் பட், ராம்கோபால் வர்மா உள்ளிட்டோர் டுவிட்டரில் கருத்து வெளியிட்டது இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions