ஆபாச பாடல்களை பாட மறுக்கும் அனுராதா ஸ்ரீராம்!

Bookmark and Share

ஆபாச பாடல்களை பாட மறுக்கும் அனுராதா ஸ்ரீராம்!

வெற்றிக்கொடி கட்டு படத்துக்காக பா.விஜய் எழுதிய, கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலை பாடி பிரபலமானவர் அனுராதா ஸ்ரீராம். அதன்பிறகு ஏராளமான பாடல்களை பாடிவரும் இவர், கர்நாடக இசை, மேற்கத்திய இசையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

அவற்றை ஆராய்ச்சியும் செய்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என 5 மொழிகளிலும் பின்னணி பாடியிருப்பவர். மேலும், இன்றைய அளவில் என்னதான் புதிது புதிதான பாடகிகள் வந்து கொண்டிருந்தாலும், கொஞ்சம் கடினமான பாடல்களை பாட வேண்டும் என்றாலே அனுராதா ஸ்ரீராமைதான் அழைக்கிறார்கள்.

அந்த அளவுக்கு எந்த மாதிரியான பாடல்களாக இருந்தாலும் சிறப்பாக, இயல்பாக பாடி விடக்கூடியவர் அவர். அதேசமயம், தமிழ் பாடகி என்பதால், தான் பாடும் பாடல் வரிகளின் பொருளை உணர்ந்து பாடக்கூடியவர்.

அதனால், அப்படி அவர் பாடும் பாடல்களில் ஆபாசமான வார்த்தைகள் ஏதேனும் இடம்பெற்றால், அவற்றை சுட்டிக்காட்டி இந்த மாதிரி வார்த்தைகளை எடுத்து விடுங்கள். இவ்வளவு அசிங்கமான வார்த்தைகளை உச்சரித்து என்னால் பாட முடியாது என்று ரெக்கார்டிங் தியேட்டரிலேயே வாக்குவாதம் செய்கிறார் அனுராதா ஸ்ரீராம்.

அதையடுத்து, சம்பந்தப்ட்ட இயக்குனரும், பாடலாசிரியரும் அந்த வரிகளை மாற்றினால் மட்டுமே அந்த பாடலை பாடும் அவர், ஒருவேளை அவர்கள் மாற்ற முடியாது என்று அடம் பிடித்தால், அப்படியென்றால் என்னால் இந்த பாடலை பாட முடியாது. வேறு யாரையாவது வைத்து பாடிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியேறி விடுகிறார் அனுராதா ஸ்ரீராம். 


Post your comment





Related News
சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்
இசையமைப்பாளர் ஆனார் பாடகி அனுராதா ஸ்ரீராம்
பணத்திற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை: நாயகன் ஸ்ரீராம்
ஒளிப்பதிவாளர் சங்க தேர்தல்: சிகா ஆண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!
தேர்தல் களத்தில் இறங்கும் பி.சி.ஸ்ரீராம்?
நயன்தாராதான் வேண்டும் : அடம்பிடிக்கும் ஹீரோ...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions