ஏ.ஆர்.முருகதாஸின் இந்திப் படத்தில் நடிக்கும் அனுராக் காஷ்யப்

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸின் இந்திப் படத்தில் நடிக்கும் அனுராக் காஷ்யப்

 உலக அளவில் பிரசித்தி பெற்றுவரும் இயக்குனர் அனுராக் காஷ்யப் முருகதாஸ் இந்தியில் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனுராக் காஷ்யபுக்கு தமிழ் கலைஞர்கள் மீது ஏதோ இனம் தெரியாத ஈர்ப்பு.

தனது கேங்ஸ் ஆஃப் வாசேபூர் திரைப்படத்தில் மதுரையின் மும்மூர்த்திகள் பாலா, அமீர், சசிகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார். பாலாவின் பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அமீரின் பருத்தி வீரன், சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் படங்களின் ரசிகர் அவர். முருகதாஸ் சோனாக்ஷி சின்காவை வைத்து இயக்கும் இந்திப் படத்தில் அனுராக் நடிக்கிறார்.

இதற்குமுன் ஐ யம் படத்தில் அவர் நடித்துள்ளார். தமிழில் வெளியான மௌனகுரு படத்தின் இந்தி ரீமேக்கைதான் முருகதாஸ் இயக்குகிறார் என்றும் அருள்நிதியின் கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்காவை நடிக்க வைக்கிறார் எனவும் பேச்சு உள்ளது. 

இந்த இந்திப் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் இந்தியில் அனிருத் அறிமுகமாகிறார். அனுராக்கின் கேங்ஸ் ஆஃப் வாசேபூர் மற்றும் அக்ளி படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் பின்னணி இசை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions