நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "

Bookmark and Share

நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள

அனுராக் காஷ்யப் ... இந்தி படவுலகில்  முக்கிய இயக்குனரான அனுராக் காஷ்யப்.,திரைக்கதை ஜாம்பவான் எனப் பெயர் எடுத்தவர்.  நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் சத்யம் திரையரங்கில் ., ஆடியோ வெளியீடு கண்ட  `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து வருகின்ற அனுராக் காஷ்யப்பின் இணை தயாரிப்பில் ., "அகிம்சா புரடக்‌‌ஷன் "எனும் பேனரில்  நிருபமா என்பவரின் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது  "ஜல்லிக்கட்டு " எனும் புதிய  படம்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டமே இப்படக் கதைக் களம். உலக அளவில் பரபரப்பைக் கிளப்பிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, அதில்  கலந்து கொண்டவர்கள், அதற்காக கூறும் காரணங்கள்....

உலக அளவில் நடந்த பிற போராட்ட வடிவங்கள்.... ஆகிய பலவற்றையும் கலந்து கட்டி  ஒரு திரைப் படமாக படைத்து இருக்கிறார் இளம் இயக்குனர்சந்தோஷ்!  ஜல்லிக்கட்டு காளையாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இத்திரைப்படம் விரைவில் துள்ளி குதித்து வந்து ரிலீஸ் ஆக வாழ்த்துவோம்!

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions