சிரஞ்சீவியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!

Bookmark and Share

சிரஞ்சீவியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!

தெலுங்கு திரை உலகின் அசைக்க முடியாத ஹீரோவாக இருந்த சிரஞ்சீவி, நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு சென்றார்.

அங்கு எதிர்பார்த்தபடி ஜொலிக்க முடியாததால் மீண்டும் சினிமாவுக்கே திரும்புயுள்ளது. சிரஞ்சீவியின் 150–வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதன் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் ‘ரீமேக்’கில் சிரஞ்சீவி நடிக்கிறார். ‘கத்தி’ படத்தின் கதையை தனது தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சிரஞ்சீவி சிறிய மாற்றம் செய்துள்ளார்.

இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. கால்ஷீட் ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை என்று தெரிகிறது. இப்போது சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்கா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

10 வருடங்களுக்கு முன்பு வெளியான சிரஞ்சீவியின் ‘ஸ்டாலின்’ படத்தில் ஒரு நடன காட்சியில் அனுஷ்கா நடித்தார். இப்போது முதல் முறையாக சிரஞ்சீவியின் ஜோடி ஆகி இருக்கிறார். அதுவும் அவரது 150–வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


Post your comment





Related News
எடையை குறைக்க ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
குடும்பத்தினர் நெருக்கடி தருகிறார்கள்- அனுஷ்கா புலம்பல்
ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன- அனுஷ்கா!
இஞ்சி இடுப்பழகிக்கு ஆதரவு கொடுக்கும் ராஜமௌலி!
ஒரு ரவுண்டு வராமல் விட மாட்டேன்-அனுஷ்கா!
இந்திக்கு போகும் நடிகை அனுஷ்கா.
புள்ள அனுஷ்காவுக்கு என்ன ஆச்சு - பரபரப்பில் திரையுலகம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions