இஞ்சி இடுப்பழகிக்கு ஆதரவு கொடுக்கும் ராஜமௌலி!

Bookmark and Share

இஞ்சி இடுப்பழகிக்கு ஆதரவு கொடுக்கும் ராஜமௌலி!

அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள ருத்ரமாதேவி படம் காகதிய வம்சம் பற்றியும், வீர மங்கை ருத்ரமா தேவியின் வாழ்கை வரலாறு என்பதாலும், மேலும் தெலுங்கானாவின் வரலாறு, கலாசாரம் இவற்றைப் பிரதிபலிக்கும் படமாக உள்ளதால் இதற்கு வரிவிலக்கு செய்யப்பட்டிருகிறது என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார். இப்படம் இந்தியாவின் முதல் வரலாற்று ஸ்டீரியோஸ்கோபிக் 3D படம் என்ற பெருமைக்குரியது.

80 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை முறையே தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக்கியிருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் , ராணா டகுபதி , கிருஷ்ணம் ராஜு , நித்யா மேனன், கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடுகின்றனர். 

இன்று 400 திரையரங்குகளில் தெலுங்கு உலகில் வெளியாகும் ருத்ரமாதேவி தமிழில் அக்டோபர் 16 அன்று ரிலீஸாக இருக்கிறது. 

இப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு தேசத்தைப் பற்றிய படம் என்பதால் இயக்குனர் ராஜமௌலி இப்படத்திற்கு வரிவிலக்கு செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions