சினிமாவில் சாதித்த திருப்தி இன்னும் ஏற்படவில்லை - அனுஷ்கா!

Bookmark and Share

சினிமாவில் சாதித்த திருப்தி இன்னும் ஏற்படவில்லை - அனுஷ்கா!

ஆறடி உயர அழகு புயல் அனுஷ்கா. அருந்ததி படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை கவர்ந்த அனுஷ்கா இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அருந்ததி படத்திற்கு பிறகு மீண்டும் ருத்ரமாதேவி, பாகுபலி என இரண்டு சரித்திர படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் அனுஷ்காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருக்கின்றனர். பாகுபலி தொடர்பான நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அனுஷ்கா நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ... பாகுபலி& படம் பற்றி?

இது ஒரு, பவர்புல் கதை. தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். என் சினிமா கேரியரில் இது தான்,  பெஸ்ட் கேரக்டர்ன்னு கூட சொல்லுவேன். இந்த மாதிரி ரோலில் இதுவரை நடித்தது இல்லை. என்னை அடுத்த கட்டத்துக்கு இந்த படம் அழைத்துச் செல்லும்.

இந்த பட போஸ்டரை பார்க்கும்போது, உங்கள் மீது பரிதாபம் வருகிறதே? அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ, அதுவாக மாறியிருக்கேன். தேவசேனா எனக்கு ஒரு பாதிப்பை கொடுத்தது உண்மை.

ஆனால், எனக்கு ஒரு ஆசை; இந்த படம் ரிலீஸ் ஆன பின், ரசிகர்கள் என்னை என்ன மனநிலையோடு பார்ப்பாங்கன்னு, வெயிட் பண்றேன். சினிமாவில் ஓரளவு சாதித்ததாக நினைக்கிறீர்களா? இன்னும் அந்த திருப்தி ஏற்படவில்லை.

சினிமாவுக்குள் வரும்போது கூட, எனக்கு சினிமா பற்றி முழுமையா தெரியாது. அப்புறம் தான் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன். இப்போ, விசுவல் எபக்ட் வரை கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லலாம்.

எந்த நடிகையின் நடிப்பை ஆச்சரியத்தோட பார்ப்பீங்க? நித்யா மேனன் கூட ஒரு படத்தில் நடிக்கிறேன். இயல்பாக, பிரமாதமாக நடிக்கிறாங்க. நடிப்பை ரொம்பவும் இயற்கையாக கேமரா முன் வெளிப்படுத்துறாங்க. அவங்க நடிப்பை ஆச்சரியப்பட்டு பார்க்கிறேன்.

ருத்ரமாதேவி - பாகுபலி இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டு படங்களையும் ஒப்பிட முடியாது; இரண்டுமே வெவ்வேறு விதமான கதை களம். ருத்ரமாதேவி ஒரு வரலாற்றுப் பதிவு; பாகுபலி அண்ணன் - தம்பிக்குள் நடக்கும் ஒரு பீரியட் பிலிம். இரண்டு படங்களிலும் சிரமப்பட்டு நடித்துள்ளேன்.

சண்டை காட்சிகளிலும் நடித்தேன். காதல் படங்களை விட இந்த மாதிரி படங்கள் பண்ணும்போது, ஒரு மனநிறைவு கிடைக்குது.  பாகுபலி படத்தில் உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொல்றாங்களே? எனக்கு மட்டும் அல்ல; இந்த படத்தில் நடித்த எல்லாருக்கும் விருது கிடைக்கும்ன்னு நான் நம்புறேன், விசுவல் எபெக்ட்டுக்கு கண்டிப்பா விருது கிடைக்கும்.

என்னை கேட்டால், இயக்குனர் இந்த படத்தில் நடிக்க என்னை தேர்வு செய்ததே, எனக்கு விருது கிடைத்தது போல உணர்கிறேன். சென்னையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு? சென்னை வரும்போதெல்லாம், தோசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், அதை ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions