பழி வாங்கவே அனுஷ்கா படம் லீக் கைதானவர் பகீர்

Bookmark and Share

பழி வாங்கவே அனுஷ்கா படம் லீக் கைதானவர் பகீர்

அனுஷ்கா நடிக்க தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் படம் பாஹுபலி (மகாபலி). ராஜமவுலி இயக்குகிறார். பெரும்பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜமவுலி ஆந்திர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

தீவிர விசாரணைக்கு பிறகு இப்படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் காட்சிகளை லீக் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இது தொடர்பாக வர்மா என்ற தொழில்நுட்ப கலைஞரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.பழிவாங்குவதற்காகவே பட காட்சிகளை லீக் செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி போலீசிடம் அவர் கூறும்போது,

‘பாஹுபலி படத்துக்கான தொழில்நுட்ப பணியில் நான் இருந்தேன். ஆனால் பட நிறுவனம் என்னை நாகரீகமாகநடத்தவில்லை. அதற்கு பழிவாங்கவே காட்சிகளை லீக் செய்தேன்.

இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்' என்றார். இது குறித்து ராஜமவுலி உள்ளிட்ட பட குழுவினர் யாரும் பதில் அளிக்கவில்லை. 


Post your comment





Related News
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions